Tuesday, June 16, 2009

விளம்பரங்கள் !


'விளம்பரங்கள்' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த வலைப்பூவின் நோக்கம் - "விளம்பரங்கள் இடுவதற்கு ஒரு இலவச தகவல் பலகையை உருவாக்குதல்".
-----------------------------
இலவசமாக விளம்பரங்கள் வெளியிட பல இணையதளங்கள் இருந்தாலும், தமிழில் வெளியிடவும், பல தமிழ் மக்களை சுலபமாக சென்றடையவும் இந்த வலைப்பூ உதவும் என்ற எண்ணத்தில் இதை உருவாக்க முனைகிறேன்...!
-----------------------------

உங்கள் தேவை எதுவாயிருப்பினும் அதை தெரியப்படுத்தலாம்... உதாரணமாக, உங்களுக்கு வீடு வாடகைக்கு தேவைப்படலாம், அல்லது உங்களது வீட்டை வாடகைக்கு விட முனைபவராக இருக்கலாம், உங்களது இரு சக்கர வாகனத்தை விற்கும் முயற்சியாக இருக்கலாம்.

கீழ் கண்ட விதங்களில் விளம்பரங்களை வெளியிடலாம்..

1. உங்களது விளம்பரத்தை 'Vilamabarangal@gmail.com' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அது ஒரு பதிவாக வெளியிடப்படும், நீங்கள் விரும்பினால், உங்களது தொலைபேசி எண் அல்லது ஈமெயில் முகவரியை பகிரலாம்.

2. இந்த வலைப்பூவில் ஒரு பின்னூடமாக உங்களது விளம்பர தேவையை வெளியிடலாம் - வாரம் ஒரு முறை அது மாற்றப்படும் (அதாவது திங்கள் முதல் ஞாயிறு வரை ஒரு விளம்பர பலகை போன்ற பதிவு போடப்படும், அதில் பின்னூட்டமாக உங்களது விளம்பரத்தை வெளியிடலாம்).

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது முறையில் அதிக தகவல்களையோ புகைப்படங்களையோ பகிர முடியாது, ஆகவே உங்கள் விளம்பரத்தை 'Vilamabarangal@gmail.com' என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்புதல் சிறந்த முறையில் தகவலை பகிர உதவும்...

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன, இந்த சேவையை சிறந்த முறையில் செய்ய அது உதவும்.. ஆகவே உங்கள் கருத்து மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..